நிலத்தை நீ துளைத்தாலும்
நீர் தரும் பூமி
மனதை நீ வதைத்தாலும்
பாசம் தரும் அன்னை
கருத்தை நீ சிதைத்தாலும்
கருணை காட்டும் தந்தை
உணர்வை நீ கொன்றாலும்
அன்பை தரும் சகோதரி
உணர்ச்சியை நீ மிதித்தாலும்
காதல் செய்யும் மனைவி ....
இவை அனைத்தும் பெற்ற
நண்பா ! உன் நட்பை மட்டும்
எனை வெறுத்து நீ ஒதுக்கினாலும்
உன்னை சுற்றிவரும் எனக்கு
ஏன் தர மறுக்கிறாய்?
No comments:
Post a Comment