Sunday, October 28, 2012


Think it over….



தமிழ் மகள்...






Thank God



பள்ளி நாட்கள்...



நினைவலைகளும்... ஏக்கங்களும்...



அழகு ... அழகு.... அழகு...



அழகு என்ற சொல்லுக்கு 
அகராதியில் பொருள் பார்த்தேன்...
பிறகு எனக்குத் தெரிந்த 
எடுத்துக்காட்டுகளைச் சொன்னேன்:....
வானவில்லின் வண்ணங்கள் ஏழும் அழகு;
மனவீசும் பூக்களின் வண்ண அழகு;
இயற்கையின் பசுமை அழகு;
பரந்த கடலின் அலைகள் அழகு;
விரிந்துள்ள வானத்தின் நீலம் அழகு;
மிதக்கின்ற மேகங்களின் பஞ்சுப்பொதி  அழகு;
கொட்டும் நீர் அருவி அழகு 
செதுக்கிய சிற்பங்கள் அழகு.
பாடும் குயில்கள் அழகு;
ஆடும் மயில்கள் அழகு;
மிளிரும் நங்கை அழகு;
தளிர்நடை இடும் குழந்தை அழகு;

அன்னை அவள் சொன்னாள் - முத்தாய் ஒன்று:
"மனிதனுக்கு அழகு  - அவனது நற்குணங்களே "  என்று.

ஏழைத் தாயின் மனசு ..

பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து 
படிப்பவனை படிக்கவைக்க 
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச 
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு 
நீ என்னிடம் பேசவந்துட்ட?"

இராப் பகலா பொத்தி வளர்த்த 
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று 
உனக்கு எங்கே புரியபோகுது
அன்பகாட்ட உனக்கு உன்  புருஷன் இருக்கானா?"

பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே 
தாங்கும் வேர்களைப் பற்றி
கேள்விக்கணைகள் மனதை 
துளைத்தாலும் பெத்த மனசு 
சொல்லுது.."ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."

Sunday, September 30, 2012

பேனா !



பேனா ! 
விதவையாய்  இருந்த 
வெள்ளைதாளுக்கு
வாழ்வு கொடுத்த 
பகுத்தறிவுவாதி !

வரமொன்று.....


வாழ்த்த என்றும் 
வானளாவிய அன்புண்டு 
என்னிடம் உன்மீது ...
அருமை சகோதரா!...
நீ என்றென்றும் அன்புடன் 
வாழ இறைவனிடம் 
யான் கேட்பேன் 
வரமொன்று..

தாய்....


தாய் -- அன்பின் அடையாளம்
தாய்  - ஆற்றலின் ஒருங்கிணைப்பு 
தாய் - இயற்கையின் நறுமணம் 
தாய் - ஈகையின் பெருங்கடல் 
தாய் - உண்மையின் திருவுருவம் 
தாய்  - ஊண் தந்து உறங்க வைப்பாள் நம்மை 
தாய்  - என்றும் நலம் நாடும் நண்பி 
தாய்  - ஏற்றமோடு காத்திடுவாள் நம்மை 
தாய்  - ஐயமின்றி அருளிடுவாள் என்றும் 
தாய் - ஒற்றுமையை உணர்த்திட்டாள் நம்மிடையே
தாய்  - ஓதவாள் என்றும் இறைவன் புகழ் நமக்க 

என்தவம் செய்திட்டேன்


பாட்டினிலே எனது நேசத்தை 
அன்புடனே சொற்றொடரில் 
சொல்லிட்ட எனதுருமை 
சகோதரா ! அன்புக்காக 
பாசத்துக்காக ஏங்கும்
பலருண்டு இப்புவிமீதினிலே
உம பாசத்தையும் நேசத்தையும் 
பெற்றிடவே என்தவம் 
செய்திட்டேன் நானிங்கே !

கவிதை!

தேனமுதம் மட்டுமன்றி
கூடவே தினைமாவும் 
தந்திடவே வேண்டி நின்றார் 
வெங்கடேசன் தானிங்கே 
வந்திடுவார் ... நல்கிடுவார் ...
மனதினிமை பெற்றிடவே 
மகிழ்வான கவிதையொன்று 

நன்றி சகோதரா


இசைப்பாட்டு பாடி 
என் இதயத்தில்
சிம்மாசனமிட்டு 
வீற்றிருக்கும் 
கவிஞரே உமது 
தங்கை என்ற ஒரு சொல்
என் கண்களில் 
கங்கையை கொண்டுவந்தது என்றால்
உமது இசைப்பாட்டு
எமது நெஞ்சத்தில் மகிழ்வை தந்தது 
நன்றி சகோதரா !

என்கவிதை பேசும் ...


பூ மலர உதவிடும் கதிரவன் போல 
இப்புவி மீது வாழும் உயிர்கள் 
உயர்ந்திட என்கவிதை பேசும் ...
பட்டினியால் வாடுகின்ற ஏழை 
நெஞ்சமது படுகின்ற துயரங்கள் 
பறைசாற்றிட என்கவிதை பேசும் ...
உழைக்கின்ற மாந்தர்தம் 
எண்ணிலடங்கா வியர்வை துளிகள்
தம்மணத்தை போற்றி என்கவிதை பேசும்  
ஏமாற்ற வருகின்ற எத்தர்தம்மை 
மக்களிடையே இனம்காட்டி காப்பாற்றிட 
எழுத்தாலே எம்கவிதை கூறு போடும் 
இளங்காலை சூர்யனை போல 
இதமான  வெளிச்சத்தை உலகுக்குத்
தந்திடவே என்கவிதை இனி பேசும் 
தாகம் தனை தணிக்க பெய்திடும் 
தன்னகிரில்லா மழையை போல 
கனிவான கருத்தினையே என்கவிதை பேசும் 
ஒப்பற்ற வாழ்விற்கு உறுதுணையை 
உன்னோடு வந்திடவே என்கவிதை நாடும்.  

நீர்விழ்ச்சி


முழுமதியே... உன்னை 
முத்தமிட நினைத்து 
முனைப்புடனே குதித்து 
முடியாமல் திகைத்து 
நித்தம் வான் பார்த்து 
விழ்ந்தவனோ இந்த 
 நீர்விழ்ச்சி 

நிலவு


இரவு என்னும் தேரில்
பவனி வரும் வெண்ணிலவே -
உனதழகை கண்கொண்டு ரசிக்க
விண்மீன் கூட்டங்கள் வேள்வி நடத்தும்;
மறைத்த சூரிய வெளிச்சத்தை நீ 
உன்னுள்கொண்டு தருகிறாய் சூரிய க்ரஹனம்
யார் கொடுத்த சக்தி உன்னை பொலிர செய்கிறது 
பௌர்ணமி என்ற நன்னாளில் ?
பாதி நாட்கள் உலா வந்த உன்னை தேடி 
மீதி நாட்கள் கழிக்கிறேன் நான் பாட்டெழுதி 
இரவின் மடியில் விளையாடும் நீ
பகலில் மறைந்து எங்கு செல்வாய்?
தேய்ந்தும் பின்பு வளர்ந்தும் நீ
மக்களுக்கு சொல்லும் கருத்துதான் என்ன?
விடாமுயற்சி தேவை என்றா

நண்பா உனது நட்பு வேண்டும்


நிலத்தை நீ துளைத்தாலும் 
நீர் தரும் பூமி 
மனதை நீ வதைத்தாலும் 
பாசம் தரும் அன்னை 
கருத்தை நீ சிதைத்தாலும் 
கருணை காட்டும் தந்தை 
உணர்வை நீ கொன்றாலும்
அன்பை தரும் சகோதரி  
உணர்ச்சியை நீ மிதித்தாலும்  
காதல் செய்யும் மனைவி ....
இவை அனைத்தும் பெற்ற 
நண்பா ! உன் நட்பை மட்டும் 
எனை வெறுத்து நீ ஒதுக்கினாலும் 
உன்னை சுற்றிவரும் எனக்கு 
ஏன் தர மறுக்கிறாய்

Wednesday, September 26, 2012

செய்யாதே....


வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடும்பொழுது 
வேடிக்கையாக இருந்தாலும் விபரீதமாக மாறாமல் இருக்க 
சந்தோஷத்தில் இருக்கும் பொழுது சத்தியம் செய்யாதே 
கோபத்தில் இருக்கும் பொழுது எதிர்த்து பேசாதே 
துக்கத்தில் இருக்கும் பொழுது முடிவு செய்யாதே 

கடவுள் கருணை செய்தார்


கடவுள் கருணை செய்தார் 
கண்டிப்புடன் பாசத்தை தந்திட்ட அப்பா
எனது படிப்பை தெய்வமாக மதிக்க 
சொல்லி தந்த  தாத்தா , மற்றும் அப்பா
இவர்கள் என் வாழ்வில் வந்ததால் 
கல்வி என் வாழ்வில் வந்தது 

கதைகள் ....


வெற்றி கதைகளை நீ படித்தால் 
உனக்கு அவை தகவல்களை மட்டுமே தரும் 
தோல்வி சந்தித்த கதைகளை படி 
வெற்றி அடைவது எப்படி என்கின்ற 
கருத்துக்களை கண்டு பிடிப்பாய் 

மனதிற்கு ....


மனதிற்கு .... மிக கஷ்டமாக இருக்கிறது...
நேற்று என்னை உலகத்திலயே மிக சந்தோஷமாக 
மிக மிக வேண்டிய உயர்வான இடத்தில் வைத்திருந்தவர்கள் 
இன்று என்னை உலகிலயே மிகவும் வேண்டதவளாக
எண்ண வைத்து வினாடியில் தூக்கி எறிந்து விட்டார்கள்  
பரவாயில்லை; அவர்களை இதை செய்வதன் மூலமாக 
சந்தோசம் அடைய வைக்க எனக்கு வாய்ப்பு அளித்தவர்கள்    
கடவுளின் குழந்தைகள்; எனவே எனக்கு வேண்டியவர்கள் 

வாழ்கை ....


சில நேரங்கள் வாழ்கை 
உங்களை மிக பெரிய சிக்கலான சந்திப்புகளை 
சந்திக்க வைக்கும் ;
பிறர் உங்களை பார்த்து 
ஏளனம் செய்து சிரிப்பதை விட 
நீங்கள் அந்த தருணங்களை 
சிரிப்ப்புடன் ஏற்றுக்கொள்வது 
உங்களை வாழ்வில் உயர்த்தும்... 

சந்தோஷம் .........


சந்தோஷமான ஓரிதயம் 
தன்னை சுற்றிலும் ஒளிமயமான 
கதிர்களை பரப்பும் 
அக்கதிர்கள் நம்மிடையே புனிதமான 
தெய்வீக அமைதியை அளிக்கும் 
இறைவனே! 
எனது நண்பர்களை அற்புதமான 
சந்தோஷத்தை காண 
கிடைக்கும் எனக்கு சந்தோஷம்   

உன்னத உறவு ..........


சுயநல இலக்கின்றி 
நாம் செய்யும் எந்த 
ஒரு செயலும் 
நாம் சொல்லும் எந்த 
ஒரு வார்த்தையும் 
ஒரு உன்னதமான 
உறவை உருவாக்கும் 

பிரச்சனைகள் ....


நம் வாழ்க்கையில் 
இடைவிடாது சிந்திப்பதால் 
பாதி பிரச்சனைகளும் 
இன்றியாமையதபோழுதும் சிந்திக்காததால் 
பாதி பிரச்சனைகளும் 
இறைவா! எதற்கு
இந்த "மூளையும்" 
இப்ப்ரச்சனைகளும் !!

மனவலிமை -.....


நீ ஒருவரை விரும்புவது 
உனக்கு மனவலிமையை கொடுக்கும் 
ஒருவர் உன்னை விரும்புவது 
உனக்கு சக்தியை கொடுக்கும் 

பாடம் ........


கற்க வேண்டிய சரியான நேரத்தில் 
நாம் கற்காத பாடங்களை இயற்கை  
நாம் கஷ்டபடுகின்ற நேரத்தில் 
கட்டாயப்படுத்தி நம்மை 
கற்க வைக்கும் 

புன்னகை ......


உலகத்திலயே சோகம் என்கின்ற வியாதியை நீக்கி 
சந்தோசம் என்கின்ற சுக நலத்தை தருகின்ற 
பக்க விளைவில்லாத விலை மதிப்பில்லாத 
ஒரே மருந்து - உனது புன்னகை 

அழுகை!!........


குழந்தை பருவத்தில்  
நமக்குப்பிடிததை  பெற 
அனைவரது கவனத்தையும்
ஈர்க்க சத்தமாக அழுவோம்...
வளர்ந்த பிறகு 
நமக்குப்பிடிததை மறக்க 
பிறரது  கவனத்தை
ஈர்க்காதவாறு அமைதியாக அழுவோம்...

சிந்திக்க விரும்புகிறேன் !!.....


சிந்திக்க விரும்புகிறேன் 
சிறந்த கல்வியறிவினை 
என்னுயிர் மூச்சு இருக்கும்வரை
என் குழந்தைகளுக்கு 
எடுத்தியம்பிட
யான் செய்ய வேண்டியன 
என்ன என்று அறிந்துகொள்ள 
சிந்திக்க விழைகிறேன் ...

கண்கள்......


கண்கள் -
கனவுகளின் நீர் தேக்கங்கள்....
கண்கள் -
உணர்சிகளின் பிரதிபலிப்புகள் ....
கண்கள் -
அன்பு வெளிப்பாட்டின் அளவுகோல்கள்...
கண்கள் -
நம் ஆழ்மனத்தின் திறவுகோல்கள்...
கண்கள் -
மலரை மொய்க்கும் கருவண்டுகள்….
கண்கள் -
நிலவின் ஒளிச்சிதறல்கள்…..
கண்கள் -
நட்சத்திரங்களின் எழுத்துக்கள்…..
கண்கள் -
பறக்காத மின்மினிகள் 
கண்கள் -
நம் விழிகளின் விழிகள்;
 இந்த பிஞ்சுகளின் கண்கள் -
இறைவனின் கருணைப் பார்வைகள்